கரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 158 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது


கரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 158 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது
x

கரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 158 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார்.

கரூர்

பரிசுத் தொகுப்பு

பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, வேட்டி- சேலை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார்.

அதன்படி கரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை கரூர் காந்திகிராமம் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ரேஷன் கடையில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ேபட்டி

பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறுகையில், கரூர் மாவட்டத்தில் உள்ள 384 முழு நேர ரேஷன் கடைகள் மற்றும் 219 பகுதி நேர ரேஷன் கடைகள் என மொத்தம் 603 ரேஷன் கடைகளில் உள்ள 3,31,158 குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுநீள கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

கூட்ட நெரிசல் இல்லாமல்....

குடும்ப அட்டைதாரர்கள் சிரமமின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக் கொள்ள ஏதுவாக சுழற்சி முறையில் தினசரி குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. சிரமமின்றி கூட்ட நெரிசலின்றி பரிசுத்தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் எவ்வித குறையுமின்றி இத்திட்டத்தினை செயல்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொங்கல் பரிசு தொகுப்பினை பெறுவதற்காக பொதுமக்கள் ரேஷன் கடைகள் முன்பு நீண்ட வரிசையில் நின்று பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுச்சென்றது குறிப்பிடத்தக்கது.


Next Story