அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் தள ஓடு அமைக்கும் பணி தொடங்கியது


அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் தள ஓடு அமைக்கும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 1 May 2023 12:30 AM IST (Updated: 1 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் தள ஓடு அமைக்கும் பணி தொடங்கியது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் மேல் தளத்தில் தள ஓடு அமைப்பதற்கான திருப்பணி நேற்று தொடங்கியது. இந்த பணியை அய்யாவழி அகில திருகுடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர் தொடங்கி வைத்தார்.

விழாவில், அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை செயலாளர் பொன்னுதுரை, இணை தலைவர் கோபால் நாடார், இணை செயலாளர்கள் செல்வின், வரதராஜபெருமாள், ராதாகிருஷ்ணன், நிர்வாக குழு உறுப்பினர்கள் சுதேசன், கனி ஆசாரி, கோபால், செல்வராஜ், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.




Next Story