விநாயகர் சிலை தயாரிக்கும் பணி தீவிரம்


விநாயகர் சிலை தயாரிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 8 Aug 2023 1:30 AM IST (Updated: 8 Aug 2023 1:31 AM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பழனி பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

திண்டுக்கல்

இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பொதுமக்கள், இந்து அமைப்பினர் தங்கள் வீடு, தெருக்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பழனி பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பழனியை அடுத்த சிவகிரிப்பட்டி பகுதியில் முகாமிட்டு, குஜராத் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு வண்ணம், அளவுகளில் விநாயகர் சிலை தயாரிக்கப்பட்டு வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து தொழிலாளர்கள் கூறும்போது, சுண்ணாம்பு, மாவை பயன்படுத்தி விநாயகர் சிலை செய்து வருகிறோம். சிலையின் வடிவம், அளவுக்கு ஏற்ப ரூ.300 முதல் ரூ.1000 வரை விற்பனை செய்வோம். உள்ளூர் வியாபாரிகள் பலர் தற்போதே முன்பதிவு செய்துள்ளனர் என்றனர்.


Related Tags :
Next Story