47 ஆயிரம் வீடுகளுக்கு தேசியக்கொடி வழங்கும் பணி


47 ஆயிரம் வீடுகளுக்கு தேசியக்கொடி வழங்கும் பணி
x

47 ஆயிரம் வீடுகளுக்கு தேசியக்கொடி வழங்கும் பணி

தஞ்சாவூர்

இந்திய நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து தொழிற்சாலைகளிலும், வீடுகளிலும் இன்று (சனிக்கிழமை) முதல் 15-ந் தேதி வரை தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி மக்களிடம் அறிவுறுத்தினார். இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. தஞ்சை மாநகர பகுதியில் உள்ள 47 ஆயிரம் வீடுகளுக்கு இலவசமாக தேசியக்கொடியை வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் தேசியக்கொடியை மூன்றடி பிளாஸ்டிக் பைப்பில் கட்டும் பணி நேற்று நடந்தது. இதில் கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு தேசியக்கொடியை பிளாஸ்டிக் பைப்பில் கட்டினர். இதையடுத்து கல்லூரி மாணவிகள் 250 பேர் மூலம் 47 ஆயிரம் வீடுகளுக்கு மூவர்ண தேசியக்கொடியை இன்று (சனிக்கிழமை) முதல் வழங்கப்பட உள்ளதாக மாநகராட்சி பணியாளர்கள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story