சென்னையில் மீண்டும் வீடுகளில் கொரோனா ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடக்கம்
சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை தொடங்கி உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் குறைந்திருந்த நிலையில், சமீப நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, தமிழகத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பு வழிமுறைகளான, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற வழிமுறைகளை கைக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து, சென்னை மாநகராட்சி, சென்னையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக தொற்று பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் மட்டும் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story