வென்னிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்லும் சாலை சீரமைக்கும் பணி தீவிரம்


வென்னிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்லும் சாலை சீரமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 26 April 2023 1:40 AM IST (Updated: 26 April 2023 3:18 PM IST)
t-max-icont-min-icon

காரியாபட்டி அருகே வென்னிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்லும் சாலை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

விருதுநகர்

காரியாபட்டி

காரியாபட்டி அருகே வென்னிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்லும் சாலை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அய்யனார் கோவில்

காரியாபட்டி தாலுகா எம். இலுப்பைகுளம் கிராமத்தில் வென்னிமுத்து அய்யனார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும்.

இந்த கோவிலுக்கு 44 கிராமங்களை சேர்ந்தவர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். ஆனால் இந்த கோவிலுக்கு செல்ல வேண்டுமானால் இலுப்பைகுளம் கிராமத்திலிருந்து கண்மாய் கரை வழியாக தான் செல்ல வேண்டும். மழைக்காலங்களில் பொதுமக்கள் மிகவும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இந்த நிலையில் வென்னிமுத்து அய்யனார் கோவில் சாமி கும்பிடும் பொதுமக்கள் அமைச்சர் தங்கம் தென்னரசுவை சந்தித்து வென்னிமுத்து அய்யனார் கோவிலுக்கு சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

சாலை சீரமைக்கும் பணி

இந்த கோரிக்கையின் அடிப்படையில் வென்னிமுத்து அய்யனார் கோவில் முதல் முடுக்கன்குளம் சந்தை வரை தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சாலை மேம்பாடு செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தற்போது சாலை மேம்பாடு செய்யப்பட்டு வரும் பணியினை மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன் பார்வையிட்டார். காரியாபட்டி பகுதி விவசாய ஆத்ம குழு தலைவர் கந்தசாமி, டி. வேப்பங்குளம் தண்டீஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story