தஞ்சை சாலைகளில் இருந்த ஆபத்தான பள்ளங்களை மூடும் பணி தொடங்கியது


தஞ்சை சாலைகளில் இருந்த ஆபத்தான பள்ளங்களை மூடும் பணி தொடங்கியது
x

தஞ்சை சாலைகளில் இருந்த ஆபத்தான பள்ளங்களை மூடும் பணி தொடங்கியது

தஞ்சாவூர்

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக தஞ்சை சாலைகளில் இருந்த ஆபத்தான பள்ளங்களை மூடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளங்கள்

தஞ்சை மாநகர பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆக்கிரமிப்புகள் அகற்றம், சாலை விரிவாக்க பணிகள், புதிதாக சாலை அமைக்கும் பணிகள் என எண்ணற்ற பணிகள் நடந்து வருகிறது. இருந்த போதில் தஞ்சை முக்கிய வீதிகளில் உள்ள சாலைகளில் ஆங்காங்கே ஆபத்தான பள்ளங்கள் காணப்பட்டு வந்தது.

குறிப்பாக தஞ்சை கொள்ளுப்பேட்டை தெருவில் உள்ள சாலையின் நடுவே பாதாள சாக்கடை குழி உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டிருந்தது. தஞ்சை மானம்புச்சாவடி சி.எஸ்.ஐ.சர்ச் அருகே சாலையோரத்தில் உள்ள தொட்டியில் மூடி உடைந்து ஆபத்தான பள்ளமாக காட்சி அளித்தது. இதன்காரணமாக அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைந்து வந்தனர்.

'தினத்தந்தி' செய்தி எதிரொலி

இதுகுறித்து 'தினத்தந்தி'நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தஞ்சை மானம்புச்சாவடி சி.எஸ்.ஐ.சர்ச் அருகே சாலையோரத்தில் திறந்த நிலையில் இருந்த தொட்டி மூடப்பட்டது. கொள்ளுப்பேட்டை தெருவில் உள்வாங்கிய நிலையில் இருந்த பாதாள சாக்கடை குழியை சீரமைக்கும் பணியிலும் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இதே போல தஞ்சை முக்கிய வீதிகளில் உள்ள சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களையும் மூடும் பணியும் தொடங்கி உள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.


Related Tags :
Next Story