ஏணியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு
சங்ககிரி:-
சங்ககிரி அருகே மொத்தையனூர் ஊராட்சி புதுவளவு அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 40). சென்டரிங் தொழிலாளி. இவர் தனது மனைவியை பிரிந்து, அந்த பகுதியில் அக்காள் சுமதி வீட்டில் வசித்து வந்தார். பரமசிவத்துக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் பரமசிவம் மதுபோதையில், சுமதி கட்டிவரும் புதிய வீட்டுக்கு சென்றார். அங்கிருந்த ஏணியின் மீது ஏறினார். பின்னர் அதில் இருந்து இறங்கியபோது கீழே தவறி விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பலியானார். இதுகுறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.