மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு


மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 23 July 2022 9:00 PM IST (Updated: 23 July 2022 9:00 PM IST)
t-max-icont-min-icon

திருமருகல் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா உபயவேதாந்தபுரம் மூர்த்தி தோப்பு தெருவை சேர்ந்த காசிநாதன் மகன் ராஜ்கமல் (வயது 32) கூலித்தொழிலாளி.இவர் சம்பவத்தன்று திருமருகல் அருகே அம்பலில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது ராஜ்கமல் தடுமாறி மரத்தில் இருந்து கீழே விழுந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ்கமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

---


Next Story