விபத்தில் தொழிலாளி பலி
விபத்தில் தொழிலாளி பலியானார்.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை அருகே உள்ள அலமேலு மங்கைபுரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 31) செவல்பட்டியை சேர்ந்த சங்கிலி பாண்டி (40) ஆகிய 2 பேரும் இரு சக்கர வாகனத்தில் கட்டிட வேலைக்காக சிவகாசிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து வெம்பக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்த வேன் பேர்நாயக்கன்பட்டி அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக மோதியதில் பாலகிருஷ்ணன் பலத்த காயமடைந்தார்.
உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது பாலகிருஷ்ணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சங்கிலிபாண்டிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிமுருகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து வேன் டிரைவர் சுதாகரை தேடி வருகின்றனர்.