விபத்தில் தொழிலாளி பலி
விபத்தில் தொழிலாளி பலி
தஞ்சை ஞானம் நகரை சேர்ந்தவர் பிரித்திவிராஜ் (வயது 42). தொழிலாளியான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி கடந்த ஆண்டு இறந்து விட்டார். தனது மனைவிக்கு திதி கொடுப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் சொந்த ஊர் வந்தார். சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் ராமநாதன் ரவுண்டானாவில் இருந்து மேரிஸ் கார்னர் சாலையில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அந்த சாலையில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதி அருகே என்ற போது எதிரில் வந்த சுற்றுலா வாகனம் ஒன்று பிரித்திவிராஜ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. விபத்தில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரித்திவிராஜ் இறந்தார். இதுகுறித்து பிரித்திவிராஜ் உறவினர் கொடுத்த புகாரின் பேரில் தஞ்சை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.