விபத்தில் தொழிலாளி பலி


விபத்தில் தொழிலாளி பலி
x

அருப்புக்கோட்டை அருகே விபத்தில் தொழிலாளி பலியானார்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் பாண்டி (வயது40). தொழிலாளி. இவரது மனைவி ஜெயலட்சுமி. இவரது தாய் அருப்புக்கோட்டை அருகே மல்லாங்கிணறு வளையங்குளம் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் பாண்டி வளையங்குளத்தில் உள்ள தனது தாயை பார்த்துவிட்டு பின்னர் சொந்த வேலையாக அருகில் உள்ள கோவிலாங்குளம் சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது கோவிலாங்குளம் விலக்கில் தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக பாண்டி ஓட்டி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார், பாண்டியின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story