விபத்தில் தொழிலாளி பலி


விபத்தில் தொழிலாளி பலி
x

அருப்புக்கோட்டை அருகே விபத்தில் தொழிலாளி பலியானார்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டி சிலோன் காலனியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 50). இவர் திருச்சுழி ரோட்டில் உள்ள ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இவர் பணியை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பஜார் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே முனியசாமி என்பவர் வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் வேல்முருகன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். முனியசாமி காயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story