விபத்தில் தொழிலாளி பலி
விபத்தில் தொழிலாளி பலி
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி வெள்ளையாபுரம் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 52) தொழிலாளி. இவர் பெட்ரோல் போடுவதற்காக மோட்டார் சைக்கிளில் பந்தல்குடி-புதூர் விலக்கு சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பெட்ரோல் பங்க் முன்பு மோட்டார் சைக்கிளை திருப்ப முயன்ற போது பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதி கிருஷ்ணசாமி படுகாயம் அடைந்துசம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த பந்தல்குடி போலீசார் கிருஷ்ணசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து அவரது மனைவி ஜெயலட்சுமி(42) கொடுத்த புகாரின் பேரில் சரக்கு வாகன டிரைவர் விளாத்திகுளம் மெட்டல்பட்டியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.