டிராக்டரில் இருந்து விழுந்த தொழிலாளி பலி


டிராக்டரில் இருந்து விழுந்த தொழிலாளி பலி
x

கந்திலி அருேக டிராக்டரில் இருந்து விழுந்த தொழிலாளி பலியானார்.

திருப்பத்தூர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா காளத்திப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 21), கூலித்தொழிலாளி. இவர், டிராக்டரில் செங்கல் பாரத்தை ஏற்றிக்கொண்டு சின்னகந்திலியில் உள்ள முருகன் என்பவருடைய நிலத்தில் இறக்கி கொண்டிருந்தார்.

அப்போது, டிராக்டரில் இருந்து தவறி கீேழ தலை குப்புற விழுந்தார். அதில் கோவிந்தசாமியின் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story