மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
சீர்காழியில் மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி இறந்தார்
மயிலாடுதுறை
சீர்காழி:
சீர்காழி அருகே புளிச்சக்காடு தோட்ட மானியம் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 49 )தென்னை மரம் ஏறி தேங்காய் பறிக்கும் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று புளிச்சக்காடு மேலத் தெருவில் உள்ள பாரதி என்பவரின் தென்னந்தோப்பில் இளநீர் பறிப்பதற்காக ரமேஷ் தென்னை மரம் ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ரமேசை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story