ஆற்றில் பிணமாக கிடந்த தொழிலாளி


ஆற்றில் பிணமாக கிடந்த தொழிலாளி
x
தினத்தந்தி 19 Sept 2023 12:15 AM IST (Updated: 19 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆற்றில் பிணமாக கிடந்த தொழிலாளி

கன்னியாகுமரி

குலசேகரம்:

குலசேகரம் அருகே உள்ள சேக்கல் மங்காட்டுவிளையைச் சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் (வயது55), தொழிலாளி. இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவருக்கு திருமணம் ஆகவில்லை. இதையடுத்து கிறிஸ்துதாஸ் தனது சகோதரர் சைமனின் பராமரிப்பில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் காலையில் கிறிஸ்துதாஸ் அந்த பகுதியில் உள்ள நந்தியாற்றில் குளிக்கச் சென்றுள்ளார். ஆனால், ெவகுநேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடந்த உறவினர்கள் நந்தியாற்றின் கரைப்பகுதிக்கு சென்று தேடினர். அப்போது, அங்கு படித்துறையில் கிறிஸ்துதாஸ் குளிப்பதற்காக கொண்டு சென்ற பக்கெட், துணிகள் இருந்தன. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் ஆற்றுக்குள் இறங்கி தேடினர். அப்போது, கிறிஸ்துதாஸ் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, இதுபற்றி குலசேகரம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து கிறிஸ்துதாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிறிஸ்துதாஸ் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றபோது தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story