வாலிபர் தொலைத்த செல்போனை போலீசில் ஒப்படைத்த தொழிலாளி


வாலிபர் தொலைத்த செல்போனை போலீசில் ஒப்படைத்த தொழிலாளி
x

நெமிலி அருகே வாலிபர் தொலைத்த செல்போனை போலீசில் ஒப்படைத்த தொழிலாளியை போலீசார் பாராட்டினர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த சயனபுரம் கிராமத்தை சேர்ந்த வாலிபர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அவருடைய ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் தொலைந்து விட்டது. இதுகுறித்து அவர் நெமிலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த பனைமரம் ஏறும் தொழிலாளி ஒருவர் செல்போன் கிடைத்ததாக நெமிலி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரை சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி பாராட்டி சால்வை அணிவித்து, 500 ரூபாய் சன்மானம் வழங்கினார். மேலும் அந்த வாலிபரிடம் செல்போன் ஒப்படைக்கப்பட்டது.


Next Story