தொழிலாளி தூக்கு போட்டு சாவு
கழுகுமலை அருகே தொழிலாளி தூக்கு போட்டு இறந்து போனார்.
தூத்துக்குடி
கழுகுமலை:
கழுகுமலை அருகேயுள்ள ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ராமர்(வயது60). தொழிலாளி. இவரது மனைவி ராதா(55). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக ராமர் மனைவியை பிரிந்து லட்சுமிபுரத்திலுள்ள உறவினர் ஒருவர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் லட்சுமிபுரம் கண்மாய் அருகே உள்ள காட்டுப்பகுதியில் உள்ள புளிய மரத்தில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story