தொழிலாளி, இரும்பு கம்பியால் அடித்துக்கொலை

கீழ்வேளூர் அருேக குடும்ப பிரச்சினையில் தொழிலாளியை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த அவரது அண்ணன் மகனை போலீசார் கைது செய்தனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் அருேக குடும்ப பிரச்சினையில் தொழிலாளியை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த அவரது அண்ணன் மகனை போலீசார் கைது செய்தனர்.
குடும்ப பிரச்சினை
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே கொடியாலத்தூர் ஊராட்சி தென்சாரி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 58). விவசாய கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த இவருடைய அண்ணன் கலியமூர்த்தி மகன் சுரேஷ் (33). டிரைவர். இவர்கள் 2 பேருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது.
இரும்பு கம்பியால் அடித்துக்கொலை
இந்த நிலையில் சம்பவத்தன்று பாண்டியனுக்கும், சுரேசுக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் இரும்பு கம்பியால் பாண்டியனின் தலையில் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கைது
இதுகுறித்து வலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்து நாகை மாவட்ட சிறையில் அடைத்தனர்.