பின்னோக்கி இயக்கிய லாரி மோதி தொழிலாளி பலி
அரக்கோணம் அருகே பின்னோக்கி இயக்கிய லாரி மோதி தொழிலாளி பலி
அரக்கோணம்
அரக்கோணத்தை அடுத்த அரிகிலபாடி பகுதியை சார்ந்த தாண்டவராயன் மகன் ஜெயபிரகாஷ் (வயது 42). கூலித்தொழிலாளி.
இவர் இலுப்பை தண்டலம் பகுதியில் உள்ள செங்கல் சூைளயில் வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று செங்கல் சூளையில் ஜெயபிரகாஷ் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது செங்கல் ஏற்றுவதற்காக லாரி வந்தது. செங்கல் அடுக்கி வைக்கப்பட்ட இடத்தில் நிறுத்துவதற்காக லாரியை டிரைவர் பின்னோக்கி இயக்கியுள்ளார். ஆனால் அங்கு ஜெயபிரகாஷ் நி்ன்றதை டிரைவர் கவனிக்கவில்லை.
இதனால் பின்னோக்கி வந்த லாரி ஜெயபிரகாஷ் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு பூந்தமல்லி அருகே தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயபிரகாஷ் இறந்து விட்டார்.
இது குறித்து தக்கோலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.