விஷம் குடித்து தொழிலாளி தற்ெகாலை


விஷம் குடித்து தொழிலாளி தற்ெகாலை
x

விஷம் குடித்து தொழிலாளி தற்ெகாலை

தஞ்சாவூர்

அம்மாப்பேட்டை அருகே புத்தூர் கீழத்தெருவை சேர்ந்தவர் பிச்சைமுத்து (வயது45). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று கத்தரி நத்தம் கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு பிச்சைமுத்து சென்றுள்ளார். அங்கு அவரது உறவினர்களிடம் நான் விஷம் குடித்து விட்டேன் என்று கூறிவிட்டு மயங்கி கீழே விழுந்தார். இதை கண்ட அவரது உறவினர்கள் பிச்சை முத்துவை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிச்ைசமுத்து உயிரிழந்தார். இதுகுறித்து பிச்சைமுத்துவின் மனைவி கலைச்செல்வி (32) கொடுத்த புகாரின் பேரில் அம்மாப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story