மொபட்டுடன் வாய்க்காலில் பாய்ந்த தொழிலாளி


மொபட்டுடன் வாய்க்காலில் பாய்ந்த தொழிலாளி
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் மொபட்டுடன் தொழிலாளி வாய்க்காலில் பாய்ந்தாா்.

விழுப்புரம்

திண்டிவனம்:

திண்டிவனம் பூதேரியை சேர்ந்தவர் காத்தவராயன். கூலித்தொழிலாளி. இவரது மகனை நேற்று மாலை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக காத்தவராயன், மொபட்டில் சென்றார். நாகலாபுரத்தில் உள்ள வாய்க்கால் பாலத்தில் சென்றபோது தடுமாறி மொபட்டுடன் அவர், வாய்க்காலில் விழுந்தார். அவரை அந்த பகுதி மக்கள் மீட்டனர். இந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story