பெண்ணிடம் 7½ பவுன் தங்க சங்கிலி பறித்த தொழிலாளி கைது


பெண்ணிடம் 7½ பவுன் தங்க சங்கிலி பறித்த தொழிலாளி கைது
x

திருச்செங்கோடு அருகே பெண்ணிடம் 7½ பவுன் தங்க சங்கிலி பறித்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

திருச்செங்கோடு

தங்க சங்கிலி பறிப்பு

திருச்செங்கோடு அருகே தேவனாங்குறிச்சி செரமிட்டாம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். விசைத்தறி அதிபர். இவரது மனைவி சரண்யா (வயது 36). கடந்த 14-ந் தேதி இரவு வீட்டின் போர்டிகோவில் சரண்யா செல்போன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது வீட்டின் உள்ளே இருந்த மகன் ஷர்ஷித் (12) சத்தம் போட்டு உள்ளான். சத்தம் கேட்டு வீட்டிற்குள் சென்ற சரண்யாவை முகமுடி அணிந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி தாக்கி விட்டு அவரது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடி விட்டார்.

இதையடுத்து காயம் அடைந்த சரண்யாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இதுகுறித்து திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

வாலிபர் கைது

இந்தநிலையில் திருச்செங்கோடு ரூரல் இன்ஸ்பெக்டர் பாரதிமோகன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குமாரமங்கலம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த நபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், நாமக்கல் மேட்டுப்பட்டி அகதிகள் முகாமை சேர்ந்த தொழிலாளியான பாண்டி என்கிற ராஜன் என்பதும் செரமிட்டாம்பாளையம்புதூர் பகுதியில் பெண்ணிடம் 7½ தங்க சங்கிலியை பறித்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் தேடப்பட்டு வந்த குற்றவாளி எனவும் தெரிய வந்தது.


Next Story