நேர்த்திக்கடனாக ஆடுகளை செலுத்திய தொழிலாளர்கள்


நேர்த்திக்கடனாக ஆடுகளை செலுத்திய தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 2 Aug 2023 1:15 AM IST (Updated: 2 Aug 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் முத்தழகுப்பட்டி செபஸ்தியார் ஆலய திருவிழாவில் தொழிலாளர்கள் ஆடுகளை நேர்த்திக்கடனாக செலுத்தினர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் முத்தழகுப்பட்டியில் பிரசித்தி பெற்ற புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழாவையொட்டி விடிய, விடிய அன்னதானம் நடந்தது. முன்னதாக ஆடுகள், கோழிகள், அரிசி, காய்கறிகள் ஆகியவற்றை காணிக்கையாக மக்கள் வழங்கினர். அதன்படி நேற்று, திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு மேஸ்திரிகள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் மேஸ்திரி அரபாத் தலைமையில் தாரை, தப்பட்டை முழங்க ஊர்வலமாக ெதாழிலாளர்கள் வந்து நேர்த்திக்கடனாக ஆடுகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் சேமிப்பு கிடங்கு மேஸ்திரிகள் சார்லஸ், பிரபாகர், ஜோசப், மாணிக்கம், முருகேசன், முத்து, வெள்ளை, ரோசர், கண்ணன், பிரிட்டோ, ஆரோக்கியம், பெரியசாமி, அலெக்ஸ் மற்றும் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story