தொழிலாளியைகத்தியால் குத்தி பணம் கேட்டு மிரட்டியவர் கைது


தொழிலாளியைகத்தியால் குத்தி பணம் கேட்டு மிரட்டியவர் கைது
x
தினத்தந்தி 6 April 2023 12:15 AM IST (Updated: 6 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தொழிலாளியை கத்தியால் குத்தி பணம் கேட்டு மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் மேற்பார்வையில் வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கருப்பட்டி அலுவலக சந்திப்பில் சென்று கொண்டு இருந்த தொழிலாளி ஒருவரை, தூத்துக்குடி திரேஸ்புரம் அண்ணாகாலனியை சேர்ந்த கென்னடி மகன் ஜான்சன் என்ற சுறா ஜான்சன் (வயது 31) என்பவர் வழிமறித்து கத்தியால் குத்தி பணம் கேட்டு மிரட்டினாராம். உடனடியாக போலீசார் சுறா ஜான்சனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story