பாகற்காய் மகசூல் அமோகம்


பாகற்காய் மகசூல் அமோகம்
x

தாயில்பட்டி பகுதிகளில் பாகற்காய் மகசூல் அமோகமாக இருப்பதாலும், விலை உயர்வாலும் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

விருதுநகர்

தாயில்பட்டி,

தாயில்பட்டி பகுதிகளில் பாகற்காய் மகசூல் அமோகமாக இருப்பதாலும், விலை உயர்வாலும் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பாகற்காய் சாகுபடி

தாயில்பட்டி, சுப்பிரமணியபுரம், பூசாரி நாயக்கன்பட்டி, விஜயரங்கபுரம் ஊராட்சியை சேர்ந்த பசும்பொன் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பாகற்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 45 நாள் பயிரான குறைந்த செலவில் அதிகமாக பலன் தரக்கூடிய பாகற்காயை விவசாயிகள் ஆர்வத்துடன் சாகுபடி செய்துள்ளனர்.

5 நாட்களுக்கு ஒரு முறை 10 தடவை கொடிகளில் இருந்து பாகற்காய் பறிக்கப்படுகிறது. இங்கு பறிக்கப்படும் பாகற்காய் சாத்தூர் மற்றும் சிவகாசி பகுதியில் உள்ள சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

விலை அதிகரிப்பு

இதுகுறித்து பசும்பொன் நகரை சேர்ந்த விவசாயி மாரிமுத்து கூறியதாவது:-

கடந்த காலங்களை விட தற்போது பாகற்காய் விளைச்சல் நன்றாக உள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வரை பாகற்காய் கிலோ ரூ.20 முதல் ரூ. 40 வரை விற்பனையானது. ஆனால் தற்போது பாகற்காயின் விலை கிலோ ரூ.70 முதல் ரூ.90 வரை விலை அதிகரித்துள்ளது. மேலும் அடுத்த மாதம் ஆவணியில் முகூர்த்த நாள் தொடங்குவதால் பாகற்காயின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

தற்போது கொடிக்கு தேவையான உரம் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தட்டுப்பாடு இல்லாமல் உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story