கொத்தமல்லி விளைச்சல் அமோகம்
கூடலூர் பகுதியில் கொத்தமல்லி அமோக விளைச்சல் அடைந்துள்ளது.
தேனி
கூடலூர் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் ஒட்டியப் பகுதிகளான பெருமாள் கோவில் புலம், கழுதைமேடு, கல் உடைச்சான் பாறை, காக்கான் ஓடை, வெட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கொத்தமல்லி பயிரிட்டுள்ளனர். தற்போது கூடலூர் பகுதியில் சொட்டுநீர் பாசனம் மூலம் சாகுபடி செய்யப்பட்டுள்ள கொத்தமல்லி அமோக விளைச்சல் அடைந்து உள்ளது. அந்த பகுதியில் உள்ள மார்க்கெட்டுகளில் கடந்த வாரம் ஒரு கிலோ கொத்தமல்லி ரூ.20-க்கு விற்பனையானது. இந்நிலையில் தற்போது கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடைகாலத்தில் மேலும் இதன் விலை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story