சோள நாற்று விளைச்சல் அமோகம்


சோள நாற்று விளைச்சல் அமோகம்
x

கால்நடை தீவனத்திற்காக பயிரிடப்பட்ட சோள நாற்று விளைச்சல் அமோகமாக உள்ளது. கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விருதுநகர்

தாயில்பட்டி

கால்நடை தீவனத்திற்காக பயிரிடப்பட்ட சோள நாற்று விளைச்சல் அமோகமாக உள்ளது. கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சோள நாற்று

வெம்பக்கோட்டை ஒன்றியம் மூர்த்திநாயக்கன்பட்டி, கஸ்தூரி ரெங்காபுரம், அலமேலுமங்கைபுரம், மீனாட்சிபுரம், செவல்பட்டி, கொட்ட மடக்கிபட்டி, காமராஜர் காலனி, சல்வார்பட்டி, அச்சங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 200 ஏக்கர் பரப்பில் சோள நாற்று பயிரிடப்பட்டுள்ளது.

ஆடு, மாடுகளுக்கு உணவாகும் கால்நடை தீவனமான சோள நாற்று கடந்த ஆண்டு கிலோ ரூ.20-க்கு விற்பனையானது. தற்போது அறுவடை பணிகள் நடந்து வருகிறது. இப்போது கிலோ ரூ.50-க்கு விற்பனை ஆகிறது. விளைச்சலும் அதிகரித்து, விலையும் கூடுதலாக கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதுகுறித்து செவல்பட்டியை சேர்ந்த விவசாயி முத்துராமலிங்கம் கூறியதாவது:-

மூர்த்தி நாயக்கன்பட்டி, செவல்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி அறுவடைக்கு பின்னர் மாற்றுபயிராக சோள நாற்று பயிரிடப்பட்டது. வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் கால்நடை அதிகம் வளர்ப்பவர்கள் இருப்பதால் கால்நடை தீவனம் வாங்க சங்கரன்கோவில் சென்று வாங்கி வந்தனர். ஆதலால் மானாவாரிபயிரான சோள நாற்றை பயிரிட்டோம். பராமரிப்பு பணிகள் குறைவு, எதிர் பார்த்ததை விட லாபம் அதிகமாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story