கூடலூர் பகுதியில் தட்டைப்பயறு விளைச்சல் அமோகம்


கூடலூர் பகுதியில் தட்டைப்பயறு விளைச்சல் அமோகம்
x
தினத்தந்தி 29 May 2023 2:30 AM IST (Updated: 29 May 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் பகுதியில் தட்டைப்பயறு அமோக விளைச்சல் அடைந்துள்ளது.

தேனி

கூடலூர் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டிய பகுதிகளான பெருமாள்கோவில்புலம். கழுதைமேடு, சரித்திரவு, பளியன்குடி, கல்லுடைச்சான்பாறை, ஏகலூத்து ஆகிய பகுதிகளில் மானாவாரி நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் விவசாயிகள் தட்டைப்பயறு, அவரை, துவரை, மொச்சைப்பயறு உள்ளிட்ட பயறு வகை பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். இருப்பினும் ஏராளமான விவசாயிகள் தட்டைப்பயறு சாகுபடியில் ஆர்வம் காட்டினர். இதனால் தட்டைப்பயறு அதிக அளவு சாகுபடி செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில் கூடலூர், லோயர்கேம்ப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருவதால் மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் நன்கு விளைச்சல் அடைந்துள்ளது. குறிப்பாக தட்டைப்பயறு அமோக விளைச்சல் கண்டுள்ளது. இதையடுத்து விவசாயிகள் களை பறித்தும், மருந்துகள் தெளித்தும் செடிகளை பாதுகாத்து வருகின்றனர். தற்போது பயிரில் பூக்களும், பிஞ்சுகளும் அதிக அளவில் உள்ளதால் விளைச்சல் அதிகரிக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். இருப்பினும் மயில்கள் கூட்டம், கூட்டமாக வந்து தட்டைப்பயறுகளை சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


Next Story