வாலிபர் எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது


வாலிபர் எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது
x

வந்தவாசி அருகே வாலிபர் எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 போ் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசி அருகே வாலிபர் எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 போ் கைது செய்யப்பட்டனர்.

வாலிபர் எரித்துக்கொலை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த நல்லூர் கிராமம் உடையார் தெருவை சேர்ந்தவர் மளிகை கடை வியாபாரி ஏழுமலை. அவருடைய மகன் விஜய் (வயது 22). இவர், கடந்த 12-ந்தேதி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகனை பல்வேறு இடங்களில் தேடினர் ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் விஜய் நாவல்பாக்கம் கிராமம் அருகே உள்ள குளத்தில் எரிந்த நிலையில் எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டார்.

3 போ் கைது

இதுதொடர்பாக சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் வந்தவாசியை அடுத்த ராமசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த மொய்தீன் (35), நல்லூர் கிராமம் உடையார் தெருவை சேர்ந்த நாராயணசாமி (32), அவரது உறவினர் வரதன் (41) ஆகிய 3 பேரும் சேர்ந்து முன்விரோதம் மற்றும் கொடுக்கல்-வாங்கல் தகராறில் விஜய்யை இரும்பு கம்பி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

பின்னர் கழுத்தை இறுக்கியும், கத்தியால் அறுத்தும் கொலை செய்துள்ளனர். மேலும் உடலை பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளனர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து இரும்பு கம்பி, கத்தி மற்றும் செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story