மேட்டூரில் பிரியாணி கடையில் வாலிபருக்கு கத்திக்குத்து


மேட்டூரில் பிரியாணி கடையில் வாலிபருக்கு கத்திக்குத்து
x

மேட்டூரில் பிரியாணி கடையில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது.

சேலம்

மேட்டூர்:

மேட்டூர் ஒர்க் ஷாப் கார்னர் பகுதியில் உள்ள ஒரு பிரியாணி கடையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்த மாதையன் (வயது 27) என்பவர் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று மேட்டூரை சேர்ந்த ஜான் பாஸ்கோ என்பவர் பிரியாணி கடைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்த மாதையனிடம் ஒரு பிரியாணி பொட்டலம் தருமாறும், பின்னர் பணம் தருவதாகவும் கூறினார்.அதற்கு மாதையன் ஏற்கனவே நீங்கள் பழைய பாக்கி தர வேண்டி இருப்பதால் கடை முதலாளியிடம் சொன்னால் நான் தருகிறேன் என்று கூறினாராம். இதனால் ஆத்திரமடைந்த ஜான் பாஸ்கோ கடையில் வெங்காயம் வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்து மாதையனை குத்தினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கடையில் இருந்தவர்கள் கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த மாதையனை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மேட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மாதையன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஜான் பாஸ்கோவை தேடி வருகின்றனர். ஜான் பாஸ்கோ மீது ஏற்கனவே கொலை மற்றும் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.


Next Story