ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாமிற்கு இரவே குவிந்த இளைஞர்கள்
காட்பாடி விளையாட்டு மைதானத்தில் அக்னிபத் திட்டத்தில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் இன்று முதல் 30-ந்தேதி வரை நடக்கிறது. இதற்காக நேற்று இரவே பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் காட்பாடி வந்து குவிந்தனர்.

ஆள் சேர்ப்பு முகாம்
அக்னிபத் திட்டத்தில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 30-ந்தேதி வரை காட்பாடியில் உள்ள வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. இதில், அக்னிவீர், அக்னிவீர் சிப்பாய் தொழில்நுட்பம் (பெண் ராணுவ காவல் பணி), உதவி செவிலியர், உதவி செவிலியர் (கால்நடை), மதபோதகர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஆள்சேர்ப்பு முகாமில் எவ்வித தனிநபரையோ அல்லது முகவர்களையோ நம்ப வேண்டாம் என வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் குவிந்தனர்
இதற்காக வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் நேற்று இரவே காட்பாடி வந்தனர். காட்பாடியில் இருந்து மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு இருசக்கர வாகனங்களிலும், நடந்தும் ஏராளமான இளைஞர்கள் சென்றனர். இதனால் அந்த பகுதி நெரிசல் மிகுந்ததாக காணப்பட்டது.
மாவட்ட விளையாட்டு மைதான பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.