வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது


வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது
x

வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 6 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் ரோந்து பணி ஈடுபட்டனர். அப்போது மேட்டு சக்கரகுப்பத்தை அடுத்த ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் சுற்றி திரிந்த வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் வாணியம்பாடியை அடுத்த காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த நாராயணமூர்த்தி மகன் முருகன் (வயது 21) என்பதும், ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள தாமலேரிமுத்தூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் கடந்த மே மாதம் மாரியம்மன் கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த நகை, பால்நாங்குப்பம் அருகே கடந்த ஜூன் மாதம் கோர்ட்டு பெண் ஊழியரிடமும், கடந்த மாதம் சாலை நகர் பகுதியில் சென்ற மூதாட்டியிடமும் நகைகளை பறித்து சென்றதும் தெரிய வந்தது.

இதனையடுத்து இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தார். அவரிடமிருந்து 6 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.


Next Story