ஏரியில் பெண் பிணம் கிடப்பதாக வாலிபர் தகவல்


ஏரியில் பெண் பிணம் கிடப்பதாக வாலிபர் தகவல்
x

ஏரியில் பெண் பிணம் கிடப்பதாக வாலிபர் தகவல் தெரிவித்தார். போலீசார் தேடியும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை அருகே டி.வீரப்பள்ளி பகுதியில் உள்ள ஏரி அருகே பெண் பிணம் கிடப்பதாக இருப்பதாக அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் திருவண்ணாமலையில் இருந்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு போன் மூலம் தகவல் கொடுத்துளளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மங்கைக்கரசி, சப்- இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை தேடினர்.

ஏரி அருகே பெண்ணின் கிழிந்த புடவை, சிறிய எலும்பு துண்டு கிடந்தது. ஆனால் அது மனிதனின் எலும்பு துண்டு இல்லை. மேலும் துர்நாற்றமும் வீசவில்லை. அதைத்தொடர்ந்து அங்கு பெண்ணின் உடல் இல்லை என்பதை போலீசார் உறுதி படுத்திக்கொண்டு அங்கிருந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story