வாலிபரை தாக்கி தங்கச்சங்கிலி பறிப்பு


வாலிபரை தாக்கி தங்கச்சங்கிலி பறிப்பு
x

வாலிபரை தாக்கி தங்கச்சங்கிலியை பறித்து சென்றனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). இவர் புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் அருங்காட்சியகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது ஒரு கும்பல் இவரை வழிமறித்து கட்டையால் தாக்கியது. மேலும் அவர் கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து விட்டு தப்பிச்சென்றனர். இது தொடர்பாக மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் 8 பேர் மீது திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story