தூண்டில் கொக்கி கையில் பாய்ந்து வாலிபர் காயம்
தூண்டில் கொக்கி கையில் பாய்ந்து வாலிபர் காயமடைந்தார்.
புதுக்கோட்டை
அன்னவாசல் அருகே காட்டுப்பட்டியை சேர்ந்த வாலிபர் அடைக்கன். இவர் நேற்று அப்பகுதியில் உள்ள குளத்தில் தூண்டில் மூலம் மீன் பிடித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தூண்டிலில் இருந்த கொக்கி அடைக்கன் கையில் குத்தியது. இதை அவர் பிடுங்க முயற்சி செய்தும் முடியவில்லை. இதற்கிடையே அவரது கை வீங்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் முக்கண்ணாமலைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு டாக்டர் ருக்சானாபாத்திமா, அவரது கையில் சிக்கியிருந்த தூண்டில் கொக்கியை அகற்றினார்.
Related Tags :
Next Story