பாலாற்றில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கினார்


பாலாற்றில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கினார்
x

பாலாற்றில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கினார். அவர்கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நூருல்லா பேட்டை பகுதியை சேர்ந்தவர் நூர் (வயது 30), கூலித்தொழிலாளி. இவர்ராமையன்தோப்பு பகுதியில் உள்ள பாலாற்றின் கிளை ஆற்றில், குளிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கியிருக்கிறார். பின்னர் அவர் வெளியில் வரவில்லை. இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் பார்த்து கூச்சலிட்டனர்.

இதுபற்றி வாணியம்பாடி தீயணைப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சென்று பொதுமக்களுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மாலை 6 மணி வரையில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இருட்டி விட்டதால் தேடும் பணி கைவிடப்பட்டது. நாளை (இன்று) மீண்டும் தேடும்பணி தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story