2 மாதமாக தலைமறைவாக இருந்த வாலிபர் கைது


2 மாதமாக தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
x

கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் 2 மாதமாக தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

மானூர் மேல தென்கலத்தை சேர்ந்தவர் மனோகர் (வயது 36). இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஒருவரை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த வழக்கில் மானூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த மனோகர், கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் 2 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதனால் அவருக்கு கோர்ட்டு பிடியாணை பிறப்பித்தது.

இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் மானூர் போலீசார், மனோகரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.


Next Story