2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வாலிபர் கைது


2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 11 Oct 2022 12:15 AM IST (Updated: 11 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் கோர்ட்டில் வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

தட்டார்மடம் :

சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் ஏ.பி.நகரை சேர்ந்தவர் பொன்ராஜ் மகன் கோயில்ராஜ் (வயது 28). எலக்ட்ரீசியன். கடந்த 2020-ம் ஆண்டு அடிதடி வழக்கு தொடர்பாக தட்டார்மடம் போலீசார், கோயில்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சாத்தான்குளம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது கோயில்ராஜ் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. கடந்த 2 ஆண்டுகளாக போலீசார் அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பென்சன் மற்றும் போலீசார் முதலூர் பஜாரில் ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த கோயில்ராஜை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.


Next Story