வீட்டின் முன்பு நிறுத்திய மொபட்டை திருடிய வாலிபர்கள்


வீட்டின் முன்பு நிறுத்திய மொபட்டை திருடிய வாலிபர்கள்
x

வீட்டின் முன்பு நிறுத்திய மொபட்டை வாலிபர்கள் திருடிய போது, அந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி

வீட்டின் முன்பு நிறுத்திய மொபட்டை வாலிபர்கள் திருடிய போது, அந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

மொபட் திருட்டு

திருச்சி கோட்டை சமஸ்பிரான்தெருவை சேர்ந்தவர் சவுமியா நாராயணன் (வயது 41). இவர் சின்னசெட்டி தெருவில் கடை நடத்தி வருகிறார். இவர் தனது மொபட்டை கடந்த 14-ந் தேதி கடையின் எதிரே நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றார்.

அதன்பிறகு அன்றையதினம் இரவே வெளியூர் சென்று விட்டார். 2 நாட்கள் கழித்து 16-ந் தேதி வீடு திரும்பினார். பின்னர் கடைக்கு சென்று மொபட்டை எடுக்க சென்றபோது, அந்த வாகனம் திருட்டு போய் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது 15-ந் தேதி அதிகாலை 2.40 மணிஅளவில் 2 பேர் மொபட்டை திருடி சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

கேமரா காட்சிகள்

உடனே இது குறித்து அவர் கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருச்சியில் வீட்டின் முன்பு நிறுத்திய மொபட்டை மர்ம நபர்கள் திருடி சென்ற கண்காணிப்பு கேமராவில் பதிவான. காட்சிகள் வெளியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Next Story