பிளாஸ்டிக் குழாய் விற்பனை கடையில் ரூ.35 ஆயிரம்-லேப்டாப் திருட்டு


பிளாஸ்டிக் குழாய் விற்பனை கடையில் ரூ.35 ஆயிரம்-லேப்டாப் திருட்டு
x

பிளாஸ்டிக் குழாய் விற்பனை கடையில் ரூ.35 ஆயிரம்-லேப்டாப் திருட்டு

ஈரோடு

பெருந்துறை

சென்னிமலையை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். இவர் பெருந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே பிளாஸ்டிக் குழாய்கள் விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த கடையில் முருகேஷ் என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 29-ந் தேதி வியாபாரம் முடிந்ததும், முருகேஷ் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை வந்து முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது கடையின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து மேஜையை திறந்து பார்த்தார்.

அப்போது அதில் வைத்திருந்த ரூ.35 ஆயிரத்தையும், மேஜை மீது வைத்திருந்த லேப்டாப்பையும் காணவில்லை. யாரோ மர்மநபர்கள் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து திருடிச்சென்றது தெரியவந்தது. இதுபற்றி பெருந்துைற போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தையும், லேப்டாப்பையும் திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story