நகை, பணம் திருட்டு


நகை, பணம் திருட்டு
x

நகை, பணம் திருட்டு போனது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வேளார் தெருவை சேர்ந்த முத்து மனைவி லட்சுமி (வயது 45). முத்து சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். லட்சுமி சைக்கிளில் பால் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் லட்சுமியும், அவருடைய மகள்களும் வெளியில் சென்றிருந்தனர். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் 4 பவுன் மதிக்கத்தக்க மூன்று வகை கைச்செயின் மற்றும் ரூ. 20000 ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பி விட்டனர். இதுகுறித்து லட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story