ஓசூரில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.2.90 லட்சம் அபேஸ்-மர்ம நபர்கள் கைவரிசை


ஓசூரில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.2.90 லட்சம் அபேஸ்-மர்ம நபர்கள் கைவரிசை
x

ஓசூரில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.2.90 லட்சம் அபேஸ் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அனில்குமார் (வயது 31), வேன் டிரைவர். இவர் கடந்த 26-ந் தேதி, சொந்த வேலையாக ஓசூருக்கு ஸ்கூட்டரில் வந்தார். பின்னர் பஸ் நிலையம் அருேக உள்ள ஓட்டல் ஒன்றின் முன்பாக, அவர் தனது ஸ்கூட்டரை நிறுத்தியிருந்தார். மேலும் ஸ்கூட்டரின் சீட்டுக்கு அடியில் உள்ள பெட்டியில் ரூ.2 லட்சத்து 90 ஆயிரம் ரொக்கத்தை வைத்திருந்தார். அவர் வேலையை முடித்து விட்டு மீண்டும் வந்து பார்த்த போது ஸ்கூட்டரின் சீட் திறக்கப்பட்ட நிலையில் இருந்தது. மேலும் அதில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 90 ஆயிரமும் திருடப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அனில்குமார் இது குறித்து ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story