வாலிபரின் வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் அபேஸ்-சைபர் கிரைம் போலீசார் விசாரணை


வாலிபரின் வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் அபேஸ்-சைபர் கிரைம் போலீசார் விசாரணை
x

வாலிபரின் வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் அபேஸ் செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

சூளகிரி அருகே உள்ள பீர்ஜேப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் விமல்கார்த்திக் (வயது 23). இவர் ஓசூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது செல்போனுக்கு அழைப்பு விடுத்த மர்ம நபர் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, வங்கி கணக்கு விவரங்களை கேட்டுள்ளார். வங்கி அதிகாரிதான் பேசுகிறார் என்று நம்பி, விமல் கார்த்திக் தனது கணக்கு தொடர்பான விவரங்களை தெரிவித்துள்ளார். இந்தநிலையில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.5 லட்சத்து 11 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பணம் அபேஸ் செய்யப்பட்டது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story