அந்தியூரில் சரக்கு ஆட்டோ திருட்டு


அந்தியூரில் சரக்கு ஆட்டோ திருட்டு
x

அந்தியூரில் சரக்கு ஆட்டோ திருட்டு

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் பஸ் நிலையம் அருகே வாடகை சரக்கு ஆட்டோ நிறுத்தம் உள்ளது. இங்கு இரவு நேரங்களில் ஒரு சிலர் சரக்கு ஆட்டோக்களை நிறுத்திவிட்டு செல்வார்கள். சிலர் வீட்டிற்கு கொண்டு செல்வார்கள்.

இந்த நிலையில் உரிமையாளர் ஒருவர் தனது சரக்கு ஆட்டோவை எடுப்பதற்காக வந்து பார்த்தார். அப்போது அவரது சரக்கு ஆட்டோவை காணவில்லை. இதனால் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தார். மேலும் அந்தியூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து அவர்களும் சரக்கு ஆட்டோவை தேடி வந்தனர். இந்த நிலையில் அந்தியூர்-மேட்டூர் ரோட்டில் உள்ள பள்ளிபாளையம் பகுதியில் அவரது சரக்கு ஆட்டோ நிறுத்தப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து உரிமையாளர் போலீசாருடன் அங்கு சென்று பார்த்து, தனது சரக்கு ஆட்டோ தான் என்பதை உறுதி செய்தார். இதைத்தொடர்ந்து சரக்கு ஆட்டோவை ஸ்டார்ட் செய்ய முயன்றார். ஆனால் டீசல் இல்லாததால் வாகனம் ஸ்டார் ஆகவில்லை. வாகனத்தை திருடி சென்றவர் டீசல் இல்லாததால் அதை அங்கேயே விட்டுவிட்டு தப்பித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து வாகனம் போலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story