டி.என்.பாளையம் அருகே வியாபாரி வீட்டில் ரூ.1½ லட்சம் கொள்ளை; மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு


டி.என்.பாளையம் அருகே வியாபாரி வீட்டில் ரூ.1½ லட்சம் கொள்ளை; மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு
x

டி.என்.பாளையம் அருகே வியாபாரி வீட்டில் ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு

டி.என்.பாளையம்

டி.என்.பாளையம் அருகே வியாபாரி வீட்டில் ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ரூ.1½ லட்சம் காணவில்லை

டி.என்.பாளையம் அருகே உள்ள டி.ஜி.புதூர் பாரதி வீதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 60). இவர் வீட்டில் பட்டு சேலை நெசவு செய்து கடைகளுக்கு சென்று விற்று வருகிறார். பழனிச்சாமி கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்று விட்டு நேற்று வீடு திரும்பியுள்ளார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை கண்ட பழனிச்சாமி அதிர்ச்சி அடைந்தார். உடனே வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்குள்ள பீரோவும் திறந்து கிடந்தது. அதிலிருந்த துணிமணிகள், பொருட்கள் சிதறி கிடந்தன. இதனால் பீரோவை பார்த்தபோது அதிலிருந்த ரூ.1½ லட்சத்தை காணவில்லை.

கொள்ளை

உடனே இதுபற்றி பழனிச்சாமி பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். பழனிச்சாமி வீட்டை பூட்டிவிட்டு சென்ற பிறகு யாரோ மர்மநபர் ஒருவர் அங்கு வந்துள்ளார். பின்னர் அவர் பழனிச்சாமி வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளார்.

அதன்பின்னர் அங்கு சாத் தப்பட்டு கிடந்த பீரோவை திறந்து அதிலிருந்த ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பித்து சென்றுள்ளார் என்பது தெரியவந்தது.

வலைவீச்சு

மேலும் ஈரோட்டில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

தடயவியல் நிபுணர்களும் வந்து அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்துவிட்டு சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story