ஷோரூமின் கதவை உடைத்து மோட்டார் சைக்கிள் திருட்டு


ஷோரூமின் கதவை உடைத்து மோட்டார் சைக்கிள் திருட்டு
x
தினத்தந்தி 16 Oct 2022 12:15 AM IST (Updated: 16 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி பிடமனேரி பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 38). இவர் குண்டல்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஷோரூம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இந்த ஷோரூமில் மோட்டார் சைக்கிள்களை பழுது பார்க்கும் பிரிவின் கதவை உடைத்து நள்ளிரவில் மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். அங்கு சர்வீஸ் செய்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை திருடி சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தினேஷ் இதுகுறித்து அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடியவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story