அந்தியூர் அருகே வீடு புகுந்து 5 பவுன் நகை-ரூ.60 ஆயிரம் திருட்டு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
அந்தியூர் அருகே வீடுபுகுந்து 5 பவுன் நகை-ரூ.60 ஆயிரம் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
அந்தியூர்
அந்தியூர் அருகே வீடுபுகுந்து 5 பவுன் நகை-ரூ.60 ஆயிரம் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நகை -பணம் திருட்டு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள முனியப்பன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 50). லாரி, வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சின்னச்சாமி வீட்டு வாசலில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார். அவருடைய மனைவியும், மகன்களும் உள்ளே படுத்திருந்தார்கள். அப்போது கதவு திறந்து கிடந்ததாக தெரிகிறது.
இதனை ெதரிந்துகொண்ட மர்ம நபர்கள் நைசாக வீட்டுக்குள் நுழைந்து பீரோ இருக்கும் அறைக்கு ெசன்று, பீரோவை நீக்கி அதில் இருந்த ரூ.60 ஆயிரத்தையும், 5 பவுன் நகையையும் திருடிச்சென்றுவிட்டார்கள். மேலும் மேஜையில் இருந்த 2 செல்போன்ளையும் கொண்டு சென்றார்கள்.
வலைவீச்சு
இந்தநிலையில் நேற்று காலை தூங்கி எழுந்ததும் வீட்டில் இருந்தவர்கள் பீரோவில் இருந்த நகை-பணம் திருட்டுப்போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். உடனே இதுபற்றி அந்தியூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்கள். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தார்கள். மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
வீட்டில் ஆட்கள் இருக்கும்போதே துணிச்சலாக மர்ம நபர்கள் வீடுபுகுந்து கொள்ளையில் ஈடுபட்டது அப்பகுதி மக்களை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.