ஓசூரில் துணிகரம்; பெண்ணிடம் 2½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு-மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபருக்கு வலைவீச்சு
ஓசூர்:
ஓசூரில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 2½ பவுன் தங்க சங்கிலியை பறித்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2½ பவுன் சங்கிலி பறிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் குமுதேப்பள்ளி ராஜாஜி நகரை சேர்ந்தவர் ராஜேஷ். இவருடைய மனைவி ரஞ்சிதா (வயது 25). இவர் கடந்த 6-ந் தேதி காலை திருச்சிப்பள்ளி அனுமன் கோவில் அருகில் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர்களது மோட்டார் சைக்கிளை, 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்றார். திடீரென அந்த வாலிபர் ரஞ்சிதா கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் தங்க சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரஞ்சிதா கூச்சலிட்டார்.
போலீசார் வலைவீச்சு
ஆனால் அதற்குள் அந்த வாலிபர் தங்க சங்கிலியை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சென்று விட்டார். இதுகுறித்து ரஞ்சிதா ஓசூர் அட்கோ போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்த சென்ற வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.